மீண்டும் கச்சதீவு குறித்த பேச்சுவார்த்தை தேவையில்லை: அலி சப்ரி ஆதங்கம்
ஐம்பது வருடங்களிற்கு முன்னர் இந்தியா கையளித்த சர்ச்சைக்குரிய கச்சதீவு குறித்து புதிய பேச்சுவார்த்தைகள் எவற்றையும் மீண்டும் ஆரம்பிக்கவேண்டிய தேவையுள்ளதாக இலங்கை கருதவில்லையென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் களத்தில் கச்சதீவு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதாவது 1976 ஆம் ஆண்டு இரண்டு அயல்நாடுகளும் கச்சதீவு குறித்து செய்துகொண்ட உடன்படிக்கையை தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவரென எதிர்பார்க்கப்படும் நரேந்திரமோடி தேர்தல் விவகாரமாக்கியுள்ளார்.
கச்சதீவு விவகாரம்
இது தொடர்பாக அலி சப்ரி கருத்து தெரிவிக்கையில், இந்த பிரச்சினை ஐம்பது வருடங்களிற்கு முன்னரே பேசப்பட்டு தீர்வுகாணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் இது குறித்து பேசவேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை
மேலும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய நிலையேற்படும் என நான் கருதவில்லையெனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்தோடு கச்சதீவின் தற்போதைய நிலையில் மாற்றங்கள் வேண்டுமென எவரும் இதுவரை வேண்டுகோள் விடுக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |