உயிரிழப்புகளை மறைக்கிறதா சீனா - 67.05 இலட்சத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.05 இலட்சத்தை தாண்டியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,705,606 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 667,006,888 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 638,699,516 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 42,470 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவின் அறிக்கை
சீனாவின் தரவுகள் அங்கு புதிய கொரோனா வைரஸ் திரிபு எதுவும் கண்டறியப்படவில்லை என்பதைக் காட்டுவதாக கூறப்படுகிறது.
ஆனால் வேகமாக பரவி வரும் COVID-19 பரவலால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதை அந்த நாடு குறைவாகக் குறிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
சீனா தனது "பூஜ்ஜிய-கோவிட்" கொள்கையை திடீரென மாற்றியதிலிருந்து மருத்துவமனைகளில் நிரம்பி வழிந்த நோயாளர்கள் பற்றிய சீனாவின் அறிக்கையின் துல்லியம் குறித்து உலகளாவிய ரீதியில் தற்போது அமைதியின்மை வளர்ந்துள்ளது.
WHO அதிகாரிகள் சீன விஞ்ஞானிகளைச் சந்தித்த ஒரு சில நாளுக்குப் பிறகு, UN நிறுவனம் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வழங்கிய தரவுகளை வெளியிட்டது.
சீனா தினசரி COVID-19 இறப்புகளை ஒற்றை இலக்கத்தில் தெரிவிப்பதாக குற்றம் சுமத்துகிறது.
இலங்கையில் கொரோனா
இலங்கையில் நாளாந்தம் சுமார் 10 கொரோனா நோயாளிகள் பதிவாகுவதாகவும், ஆனால் சந்தேகத்திற்குரிய அனைத்து நோயாளிகளையும் பரிசோதிக்காததால், சமூகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகள் இருக்கலாம் என்றும் கலாநிதி ஹேமந்த ஹேரத் அண்மையில் தெரிவித்திருந்தார்.
முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் இன்றைய நாட்களில் பரவி வரும் இன்புளுவன்சா போன்ற நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என ஹேரத் சுட்டிக்காட்டியிருந்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
