அரச அலுவலகங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
Government Employee
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sathangani
நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் அலுவலகங்களும் இன்று (15) முதல் ஏப்ரல் 17ஆம் திகதி வரை வழக்கம் போல் செயற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
முன்னதாக, எரிபொருளைச் சேமிக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்த மூன்று நாட்களிலும் அரச பணிகளை இணையவழி மூலம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.
எரிபொருள் பயன்பாடு
எனினும், பொதுமக்களின் தேவைகளைத் திறம்படப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அரச அலுவலகங்களை வழக்கமான செயற்பாடுகளுக்காகத் திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட, பாடசாலைகள் மற்றும் பொது அலுவலகங்களுக்கான புதன்கிழமை விசேட விடுமுறையை அரசாங்கம் முன்னதாக இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |