நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் குதித்த வைத்தியர்கள் - ஒரு நாள் வேலைநிறுத்தம்
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று(24) காலை 8 மணி முதல் நாளை(25) காலை 8 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ரவீ குமுதேஷ் தெரிவித்தார்.
வேலைநிறுத்த நடவடிக்கை

கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆய்வக விஞ்ஞானி வல்லுநர்கள் மற்றும் தொழில்சார் சிகிச்சை நிபுணர்கள் ஆகிய 05 தொழில்முறை சங்கங்கள் இந்த வேலைநிறுத்த நடவடிக்கையில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புற்றுநோய் நிலையங்கள், தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கான வைத்தியசாலைகள் மற்றும் மத்திய இரத்த வங்கிகள் என்பன இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என ரவீ குமுதேஷ் தெரிவித்தார்.
you may like this