இன்று நாடு முழுவதும் மதுபானசாலைகளுக்கு பூட்டு
நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இன்றைய தினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஒக்டோபர் 3 ஆம் திகதி சர்வதேசமதுவிலக்கு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
மதுபானப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள்
இதனை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களையும் இன்று மூடுவதற்கு , மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

மதுபானப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மதுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது அல்லது முழுமையாகத் தவிர்ப்பதை ஊக்குவிப்பதுமே இந்த நாளின் முதன்மை நோக்கமாகும்.
இதேவேளை, உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 30 இலட்சம் பேர் மதுபானப் பயன்பாட்டுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய காரணங்களால் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச சுகாதார அறிக்கைகளின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |