ரணிலின் சர்வகட்சி அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு..! அறிவித்தார் சம்பந்தன்
சர்வகட்சி அரசாங்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் தமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி ரீதியான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று சம்பந்தன் முன்னதாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியிருந்தார்.
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்பைக் கோரி அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி சர்வகட்சி அரசாங்கத்தை ஆதரிக்கவிருப்பதாக இரா.சம்பந்தன் ஊடகங்களிடம் முன்னரே தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், தற்பொழுது சம்பந்தன் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி தமது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்