பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் 'பொது போக்குவரத்து அனுமதியை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று (20) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ இப்போது இருக்கைப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில பேருந்துகள் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட போதே சீட் பெல்ட்கள் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பேருந்துகளை அலங்கரிக்க முடியும் என்றால் ஏன் சீட் பெல்டை பொருத்த முடியாது?
பொதுப் போக்குவரத்து அனுமதி
இப்போது சில சாரதிகள் என்னையும் காவல்துறையினரையும் ஏமாற்ற தங்கள் பிள்ளைகளது பாடசாலை பைகளின் இருக்கைப் பட்டிகளை அணிந்து வருகின்றனர். அவ்வாறானவர்களிடம் 50 பயணிகளை ஒப்படைப்பது பொருத்தமானதல்ல.
எனவே நாம் ஒரு முடிவை எடுத்துள்ளோம். எனவே,பொதுப் போக்குவரத்தில் ஒவ்வொரு சாரதியும் பொதுப் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தைப் பெறுவது கட்டாயமாகும்.
நாங்கள் இதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம், டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அவர்கள் நிச்சயமாக அந்த அனுமதிப் பத்திரத்தை பெறவேண்டும்“ என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
