தனது கைதுக்கு பின்னணியில் இருந்தவர் - அம்பலப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுவதற்கான காரணம் தனது கைது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா நேற்று (20.09.2025) காலை 9.00 மணிக்கு சிறி ஜெயவர்தனபுரவில் உள்ள மோனார்க் இம்பீரியல் வளாகத்தில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம்
அவர் மேலும் உரையாற்றுகையில், தாம் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இங்கிலாந்து திரும்பியதாகவும், கொழும்பு திரும்புவதற்கு முன்பு ஒரு இரவை அங்கேயே கழித்ததாகவும் குறிப்பிட்டதுடன் இந்த செயன்முறை முற்றிலும் உத்தியோகபூர்வ விஜயம்.
தாம் அங்கு இருந்ததால் தமக்கு கிடைத்த உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும், அவ்வாறான உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்படாது இருந்திருப்பினும் தாம் இங்கிலாந்திலேயே அன்றைய தினம் இருந்திருப்பேன் என்றும் ரணில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்னை கைது செய்வது தொடர்பான முறைப்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்டதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தன்னை கைது செய்தமை மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கு அரசு முயற்சி செய்கின்றது என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்
மேலும் மீதமுள்ள உண்மைகளை நான் சொல்ல மாட்டேன். என் வழக்கறிஞர்கள் இப்போது அதைப் பற்றி பேச வேண்டாம் என்று என்னிடம் கூறியுள்ளனர். நீங்கள் நீதிமன்றத்தில் பேசலாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
