மாணவர்கள் தொடர்பில் கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு
student
gotabaya
corona vaccine
By Sumithiran
கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு கட்டமாக கடந்த 21 ஆம் திகதி 200 ற்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்ப பாடசாலைகள் அனைத்தினதும் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசியை வழங்கி நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.