கொரோனா தடுப்பூசிகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்குமா? வெளியான புதிய தகவல்
கொரோனா தடுப்பூசி உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக சிலர் கூறும் கூற்றுகள் ஆதாரமற்றவை என்றும், இதை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இலங்கையில் கொடுக்கப்படும் தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பு மற்றும் உலகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே இவற்றை பெறுவதற்கு பயப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.
இதேவேளை, நாட்டில் உள்ள இரண்டு நிபுணர் குழுக்களால் அவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.
இந்த தடுப்பூசி குறித்து இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தவறான கருத்துகள் உள்ளன.
ஆனால், போதுமான தரவு இருந்தால் மட்டுமே வெவ்வேறு வயதினருக்கு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
ஆகவே நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்.