பூதாகரமாகும் சுப்ரீன் சாட் விவகாரம்: அரச தரப்பு அரசியலமைப்பை மீறியதாக குற்றச்சாட்டு
சுப்ரீன் சாட் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவும் (Harini Amarasuriya) அமைச்சர் வசந்த சமரசிங்கவும் (Wasantha Samarasinghe) நாடாளுமன்றத்தில் அளித்த முரண்பாடான பதில்கள், நாட்டின் அமைச்சரவை அதன் கூட்டுப் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்பதைக் காட்டுகின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல (Thalatha Atukorale) குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியலமைப்பின் படி 43:2 பிரிவு அமைச்சரவை கூட்டாகப் பொறுப்பேற்பதையும் மற்றும் நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் தெளிவாகக் கூறுகின்றது.
ஆனால் அரசியலமைப்பின் அந்தப் பிரிவு இப்போது ஒரு அரசாங்க அமைச்சரால் மீறப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
முதலீட்டு வாரியம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ “ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வந்து சதித்திட்டங்களைப் பற்றிப் பேசினார்.
தனக்குத் தோன்றினால் சதித்திட்டங்களை அடக்குவதற்குச் சட்டங்களை இயற்றுவதாகவும் அவர் மிரட்டினார், கடந்த காலத்தில் அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை.
மேலும், பிரதமர் நாடாளுமன்றத்தில் சுப்ரீன் சாட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து வருகிறார், அந்தக் கேள்வி நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள முதலீட்டு வாரியத்திற்கு சொந்தமானது.
முரண்பாடான பதில்
நிதி அமைச்சகத்தின் செயலாளர் அதற்கான பதிலை தயாரிக்க வேண்டும் இது குறித்து நெருக்கடி ஏற்பட்டிருந்தால் அது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
சுப்ரீன் சாட் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, சுப்ரீன் சாட் ரொக்கெட் ஏவப்பட்டது என்பது எந்தவொரு வளங்களையும் பயன்படுத்தாத ஒரு தனியார் முதலீடு என்று கூறியுள்ளது.
மேலும், பிரதமரின் பதிலுக்குப் பிறகு, அமைச்சர் வசந்த சமரசிங்க முரண்பாடான பதிலைக் கொடுத்தார், அமைச்சரவையில் இந்த முரண்பாடு என்ன ?
பிரதமர் ஒரு விடயத்தைச் சொல்லும்போது, அமைச்சர் வசந்த சமரசிங்க இன்னொன்றைக் கூறுகிறார், இந்தப் பதில் பிரதமரை சங்கடப்படுத்துவதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி நமக்கு எழுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
