முதலாளிகளின் கோரிக்கைக்கு தலையசைக்கும் கடற்றொழில் அமைச்சர்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கடற்றொழில் அமைச்சர் பதவியில் இருந்து இராமலிங்கம் சந்திரசேகரை உடனடியாக மாற்ற வேண்டும் என கடற்றொழில் இணையங்களின் ஊடக பேச்சாளர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், '
'வடக்கு மாகாண கடற்தொழிலாளர்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பல தடவைகள் பேசி இருக்கிறோம்.
எந்த விதத்திலும் தீர்வு கிடைக்கவில்லை
யாழ்ப்பாணம் மாவட்ட உதவி பணிப்பாளருடன் இது தொடர்பில் முறைப்பாடுகளை முன் வைத்திருக்கின்றோம். இருப்பினும் நமக்கு எந்த விதத்திலும் தீர்வு கிடைக்கவில்லை.

கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனை மாற்ற வேண்டும். முதலாளிகளின் கோரிக்கைகளை மாத்திரம் நிறைவேற்றிக் கொண்டு அவர்களுடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றார்.
கடற்றொழிலாளர்களின் அன்றாட தொழில் ரீதியான தேவைகளை அமைச்சர் பூர்த்தி செய்வதில்லை.
தமது பிரச்சினைகள் தொடர்பில் கடந்த காலங்களிலும் கடற்றொழில் அமைச்சராக செயல்பட்டவரிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.
இப்போது புதிய அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சர் கூட இந்த விடயத்தில் பாராபட்சமாகவே நடந்து கொள்கிறார்.
அவர் அட்டை பண்ணைகள் புதிய தொழில் முனைவோரை வைத்துக்கொண்டு எமது கடலை நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறார்" என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
