ஸ்தம்பிதம் அடைந்த நாடு: அநுர அரசு மீது பாய்ந்த குற்றச்சாட்டு
கடந்த நிர்வாகத்தின் போது வேகமாக வளர்ச்சியடைந்து வந்த நாடு, தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக சிறிலங்க பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று (28) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது, மேலும் உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், “இந்த நாடு வேலை செய்வதற்கு ஒரு சிறந்த இடமாக இருந்தது.இந்த நாடு வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருந்து, ஆனால் தற்போது ஸ்தம்பிதமடைய செய்துள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் பொய்கள்
இதனை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியே இதனை செய்துள்ளது.
இவ்வாறு செய்வதற்கு, அவர்கள் இரண்டு விஷயங்களைப் பயன்படுத்தினர், ஒன்று சமூகத்தில் பொய்களைப் பரப்புவது. மற்றொன்று அந்தப் பொய்கள் மூலம் மக்களை ஏமாற்றுவது.
எனவே இந்த நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்பினால், இந்த நாட்டில் தங்கள் எதிர்காலத்தை நேசிக்கும் மக்கள், ஒரு நாடு பொய் சொல்வதன் மூலமும், மற்றவர்களை வெறுப்பதன் மூலமும், உழைக்கும் மக்களை விமர்சிப்பதன் மூலமும் முன்னேறாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
