மீள ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள்: ஒதுக்கப்படவுள்ள மில்லியன் கணக்கிலான நிதி
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் மீள தீர்வை எதிர்பார்த்து தடைப்பட்டுள்ள அத்தியாவசிய அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு 8,750 மில்லியன் ரூபா மேலதிக ஒதுக்கீட்டிற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
மீள் குடியேற்றத்தை எதிர்பார்த்து பெறப்படவுள்ள இந்தத் தொகையால் வரவு செலவுத் திட்ட இடைவெளி பாதிக்கப்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடன் மறுசீரமைப்பு செயல்முறை முடியும் வரை சில வளர்ச்சித் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்
கிராமப்புற வீதிகள், பாலங்கள், சிறு குளங்கள், கால்வாய்கள், கிராமிய வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற திட்டங்கள் நிறுத்தப்படுவதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்தவுடன் வழமை போன்று இந்த நாட்டில் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 5 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
4 நாட்கள் முன்