குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நற்செய்தி: அதிகரிக்கப்படவுள்ள பயனாளிகளின் எண்ணிக்கை
புதிதாக 4 இலட்சம் அஸ்வெசும பயனாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பயனாளிகளை தெரிவு செய்வதில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முன்மொழிவுகளுக்கு அமைய நிபந்தனைகளை மீளாய்வு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்கள்
மேலும், அஸ்வெசும திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அதன்படி, புதிதாக 4 இலட்சம்அஸ்வெசும பயனாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |