இலங்கையில் சிங்கள மக்களுக்கு அசோகா் தூண் அமைத்து கொடுக்கிறது இந்தியா
இலங்கையில் சிங்கள மக்களுக்கு அசோகா் தூண் அமைத்து கொடுப்பதற்கு இந்திய முன்வந்துள்ளது.
இதன்படி மேற்கு மாகாணத்தில் உள்ள வஸ்கடுவ விகாரையில் இந்த அசோகா் தூண் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல்லை இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நாட்டிவைத்தார்.
இந்தியத் தூதரகம் வெளியிட்ட பதிவில்
இது தொடா்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில்,
Reinforcement of the deep cultural connect! HC @santjha laid the Foundation Stone for the construction of King Ashoka's Pillar of Dharma at the sacred RajaGuru Sri Subuthi Waskaduwa Maha Viharaya. He also paid his respects at the sacred Kapilavastu Relics in the Temple. pic.twitter.com/HoxiXlhf1X
— India in Sri Lanka (@IndiainSL) January 28, 2024
‘இந்தியா-இலங்கை இடையேயான கலாசார உறவை பலப்படுத்தும் வகையில், வஸ்கடுவவில் உள்ள ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகா விகாரையில் பேரரசா் அசோகரின் தா்ம தூண் கட்டுமானப் பணிகளை இந்திய தூதா் சந்தோஷ் ஜா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
அந்த விகாரையில் உள்ள கபிலவஸ்து சின்னங்களை அவா் தரிசனம் செய்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வஸ்கடுவ ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகா விகாரை முக்கிய பெளத்த வழிபாட்டுத் தலமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |