ரஷ்யா உக்ரைன் போர்க்கைதிகள் பரிமாற்றம்
இரண்டு ஆண்டுகளை முடிவில்லாமல் நெருங்கும் ரஷ்ய உக்ரைன் இடையேயான யுத்தத்தில் இருநாடுகளும் தற்போது போர்க்கைதிகளை பரிமாற்றம் செய்துள்ளன.
ரஷ்யாவுக்கு சீனா மற்றும் வடகொரியா ஆகியவை மறைமுகமாக ஆயுதங்கள் கொடுத்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா தலைமையில் பிரிட்டன் மற்றும் பிற மேற்கத்தைய நாடுகள் ஆயுதங்களை வாரி வழங்குகின்றன.
மாறிமாறி தாக்குதல்
இதனால் தற்போதுகூட மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் ரஷ்யாவின் போர் விமானம் போர்க்கைதிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போது சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் ஆறு விமான ஊழியர்கள் மற்றும் மூன்று ரஷ்ய வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
போர்க்கைதிகளை மாற்றிக்கொள்ள
இந்த சர்ச்சை பெரிதாக வெடித்த நிலையில் போர்க்கைதிகளை மாற்றிக்கொள்ள இருதரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் 195 போர்க்கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் கைதிகள் பரிமாற்றம் நடைபெற இருந்தது. ஆனால், அது நிறுத்தப்பட்டது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |