இன்று வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படும் பணம் : வெளியான மகிழ்ச்சித் தகவல்
அஸ்வெசும கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான உதவித்தொகை குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த கொடுப்பனவு இன்று (28) அஸ்வெசும கொடுப்பனவு பெறும் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் பயனாளிகள் தங்களுடைய கொடுப்பனவுகளைப் பெற முடியும் என்று அதன் தலைவர் ஜெயந்த விஜேரத்ன (Jayantha Wijeratne) குறிப்பிட்டுள்ளார்.
பல மில்லியன் ஒதுக்கீடு
அதன்படி, 592,766 பயனாளிகளுக்கு 2,963,830,000 ரூபா உரிய வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு கடந்த 22 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்14 இலட்சம் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்காக, அரசாங்கம் 11 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
