கற்றாழை செடியை சரியான திசையில் வைத்தால் வேலையில் பதவி உயர்வு கிடைக்குமாம்
கற்றாழை செடி இயல்பாகவே சருமத்தை ஈரளிப்பாக வைத்திருக்க உதவுவதோடு பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளவை ஆகும்.
ஆனால், கற்றாழை செடியை வைக்கும் இடத்தை பொருத்து வாஸ்து சாஸ்திரத்தை கணிக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
வீட்டில் கற்றாழை செடியை சரியான திசையில் வைத்தால், நேர்மறை ஆற்றல் கிடைப்பதுடன், வேலையில் நல்ல பதவி உயர்வும் கிடைக்குமாம்.
அறிவியலின் படி, வீட்டில் வளர்க்கும் தாவரங்களுக்கும் மற்றொரு முக்கியத்துவம் உள்ளது.
அதிலும் அவற்றை நீங்கள் வீட்டில் எங்கு வைக்கிறீர்கள் என்பதை பொருத்து அதனால் கிடைக்கும் பலன்கள் அமைகின்றன.
அதேபோல கற்றாழை செடியை வீட்டில் எந்த இடத்தில் வைத்தால் அதன் நன்மைகளை அடையலாம் என்று பார்ப்போம்.
ஆரோக்கியம் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படும் கற்றாழையில் நன்மை பயக்கும் மூலக்கூறுகள் நிறைந்துள்ளன.
அதனால்தான் அவை பரவலாக வளர்க்கப்படுகின்றன.
வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் மேற்கு திசையில் கற்றாழை செடியை வைத்தால் அது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இது தவிர, மேற்கு திசையில் எக்காரணம் கொண்டும் அந்த செடியை வைக்க முடியவில்லை என்றால், வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைக்கலாம். இந்த திசை உங்களுக்கு சிறந்தது. இந்த திசையில் வைப்பதினால் வேலையில் நல்ல பதவி உயர்வு கிடைக்கும்.
உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், வீட்டில் கிழக்கு திசையில் கற்றாழை செடியை வைக்கவும். இப்படிச் செய்தால் நல்ல வேலை கிடைப்பதுடன் நல்ல பதவி உயர்வும் கிடைக்கும்.
அனைவரும் வீட்டில் கற்றாழை செடியை வளர்ப்பது நல்லது. கிழக்கு திசையில் கற்றாழை செடியை வைப்பதால் மன அமைதி கிடைக்கும். எனவே வீட்டின் பால்கனியிலும் வைக்கலாம்.
கற்றாழையை வீட்டில் வைப்பதன் மூலம் அன்பு, முன்னேற்றம், செல்வம், பதவி உயர்வு, கௌரவம் அதிகரிக்கும் என்பது வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படும் நம்பிக்கை.
வாழ்வில் அல்லது வெற்றியில் வரும் அனைத்து விதமான தடைகளையும் நீக்க இந்த செடி உதவுகிறது என்பது நம்பிக்கை.
