அமேசான் காடழிப்பை எதிர்த்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகொலை! வெளியான அதிர்ச்சி அறிக்கை
அமேசான் காடுகள் அழிப்பு எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட சுற்றுசூழல் ஆர்வலர்கள் பெருமளவில் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் அதிர்ச்சி அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த குளோபல் விட்னஸ் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 2012 முதல் 2024 வரை 12 ஆண்டுகளில் 2,253 சுற்றுசூழல் ஆர்வலர்கள் உயிரிழந்துள்ளனர்.
39 ஆயிரம் கோடி மரங்கள்
அமேசான் காடுகள் பிரேசில், பெரு, போலிவியா உள்பட ஒன்பது நாடுகளில் பரந்து விரிந்து சுமார் 70 இலட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்டுள்ளன.
Image Credit: National Geographic Society
இங்கு சுமார் 39 ஆயிரம் கோடி மரங்கள் மற்றும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன.
பழங்குடி இன மக்கள் வாழும் இந்த காடுகள் ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் கோடி டன் ஒட்சீசன் வெளியிடுகின்றன.
அதிர்ச்சி அறிக்கை
இத்தகைய முக்கிய வளத்தை காப்பாற்ற பல்வேறு ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். ஆனால் உலகமயமாக்கல், இயற்கை வளங்களின் மிகைச் சுரண்டல் மற்றும் மனிதர்களின் பேராசை காரணமாக காடுகள் அழிக்கப்படுவதாக அவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதன் விளைவாக, அவர்களை குறிவைத்து கொலைகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குளோபல் விட்னஸ் தரவின்படி, கடந்த 12 ஆண்டுகளில் பிரேசிலில் மட்டும் 365 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கொலம்பியாவில் 250 பேர், பெருவில் 225 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும் 124 சுற்றுசூழல் ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
