கட்சியில் இணைந்து ஒரே வாரத்தில் விலகிய சிஸ்கேவின் முக்கிய பிரபலம்!
முன்னாள் சிஸ்கே வீரர் அம்பதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக தனது எக்ஸ்(டுவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஆரம்பதில் விளையாடியதை தொடர்ந்து 2018 முதல் 2023 -ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடினார். 2023 போட்டியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.
அதனை தொடர்ந்து ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியுடன் கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி அம்பதி ராயுடு இணைந்தார்.
This is to inform everyone that I have decided to quit the YSRCP Party and stay out of politics for a little while. Further action will be conveyed in due course of time.
— ATR (@RayuduAmbati) January 6, 2024
Thank You.
அம்பத்தி ராயுடுவின் முடிவு
இந்நிலையில் கட்சியில் இணைந்து ஒரு வாரத்தில், “நான் ஒய்எஸ்ஆர்சிபி கட்சியில் இருந்து விலகவும், அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அம்பத்தி ராயுடுவின் இந்த முடிவை ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பாராட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தெலுங்கு தேசம் கட்சி எக்ஸ் வலைத்தளத்தில், “ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி போன்ற ஒருவருடன் உங்களது அரசியல் பயணத்தை தொடராதது மகிழ்ச்சியளிக்கிறது. உங்களது எதிர்கால முடிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.
Glad to see you NOT play your political innings alongside an evil man like @ysjagan.
— Telugu Desam Party (@JaiTDP) January 6, 2024
Wishing you the best in your future endeavors! https://t.co/EDHz3BPUJm
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |