எம்பிலிப்பிட்டியில் ஒரு வயதுக்கு குழந்தையின் உயிரைப் பறித்த விபத்து
இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரு வயதும் ஐந்து மாதங்களுமான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
எம்பிலிப்பிட்டி நொனகம வீதியில் உள்ள கிறலவெலகட்டுவ பகுதியில், நொனகம நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு லொறி, அதே திசையில் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ஒரு பயணி மற்றும் ஒரு குழந்தை என மூவர் காயமடைந்தனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பின்னர் அவர்கள் எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த, ஒரு வயது ஐந்து மாதக் குழந்தை, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணியின் மகளாவார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவ் விபத்து தொடர்பில் எம்பிலிப்பிட்டிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |