ஷேக் ஹசீனாவின் வருகை குறித்து வங்கதேச அமைச்சர் நகைச்சுவை கருத்து
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டிசம்பர் மாதத்தில் வங்கதேசத்திற்குத் திரும்பமாட்டார் என்றும், குளிர்காலம் மட்டுமே நாட்டிற்கு வரும் என்றும் வங்கதேச வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஹுமாயூன் கோபிர் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் ஊடாக மட்டுமே ஷேக் ஹசீனாவை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
சில்ஹெட்டில் நடைபெற்ற கூட்டமொன்றில் இதற்கு முன்னரும் தாம் இந்தக் கருத்தைத் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட அவர், “ஷேக் ஹசீனா டிசம்பரில் வரமாட்டார்.
வங்கதேசம் கோரிக்கை
டிசம்பரில் யாரும் வரமாட்டார்கள்; குளிர்காலம் மட்டுமே வரும்” எனத் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

வங்கதேச வெளியுறவு அமைச்சில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஷேக் ஹசீனாவை முறையான ஒப்படைப்பு நடைமுறையின் ஊடாகவோ அல்லது கடுமையான கண்காணிப்பின் கீழோ வங்கதேசத்திற்கு அழைத்து வர வேண்டும் என்றும், அதுவே அவர் நாடு திரும்புவதற்கான ஒரே வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஷேக் ஹசீனா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட ஏனைய நபர்களையும் இந்தியா ஒப்படைக்க வேண்டும் என வங்கதேசம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வங்கதேசம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்தியாவில் தங்கியுள்ள ஷேக் ஹசீனா, பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் சுதந்திரம் பெற்றதை நினைவுகூரும் வெற்றி தினமான எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதியன்று, அரச விமானம் மூலம் டாக்காவுக்குத் திரும்ப விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |