பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் திருத்தம் - விஜயதாச ராஜபக்ச..!
Parliament of Sri Lanka
Dr Wijeyadasa Rajapakshe
Ranil Wickremesinghe
Sri Lanka Prevention of Terrorism Act
By Dharu
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அவசரமாக சமர்பிக்கப்போவதில்லை என்று அரசாங்கம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை இன்று நாடாளுமன்றில் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலமே தற்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்தது.
சட்டமூலம் தொடர்பில் ஆலோசனை
எனினும் பல்வேறு தரப்பினரும் காட்டிய எதிர்ப்புக்காரணமாக இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எனவே இந்த சட்டமூலத்தில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து எவரும் தமது ஆலோசனைகளை வழங்கலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அனைவரின் கருத்துக்களும் உடன்பாடுகளும் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே இந்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி