நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்த சட்டமூலம்
குழுநிலையில் திருத்தங்களுடன் கூடிய தனிநபர் தரவு பாதுகாப்பு திருத்தச் சட்டம், இம்மாதம் 21 ஆம் திகதி நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு (Ministry of Digital Economy) இன்று (17) அறிக்கை ஒன்றை வெளியிடட்டு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன், தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தும் சட்டமூலம், 2025 ஜூன் மாதம் 03 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பு விவாதத்தில் நிறைவேற்றப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களம்
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வேண்டுகோளின் பேரில், சட்டவரைஞர் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து, குழுநிலையில் முன்மொழியப்பட வேண்டிய பல சிறிய திருத்தங்களை அடையாளம் கண்டுள்ளது.
அதன்படி, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்கள், 2025 ஒக்டோபர் 21 ஆம் திகதி எந்த விவாதமும் இன்றி குழுநிலையின் போது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் சட்டமூலம் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு அதே நாளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
