ஒரே கட்டிடத்தில் வசிக்கும் ஒரு முழு நகரம்: எங்குள்ளது தெரியுமா...!
அமெரிக்காவின் (America) அலஸ்கா (Alaska) மாநிலத்தில் உள்ள ஒரு முழு நகரமே ஒரே கட்டிடத்தில் வசிக்கிறது.
விட்டியர் (Whittier) என அழைக்கப்படும் இந்த நகரத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒரே கட்டிடத்தில் வசிக்கின்றனர்.
குறித்த பகுதியில் அதிகளவான குளிர் உணரப்படுவதன் காரணமாக பொதுமக்களால் அடிக்கடி வெளியே சென்று வர முடியாத சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒரே கட்டிடத்தில் வசிக்கின்றனர்.
விட்டியர்
அலஸ்கா அமெரிக்காவின் வடகோடி மாநிலமாகும். இங்குள்ள பெரும்பாலான பகுதிகள் பனியால் மூடப்பட்டிருக்கும்.
இங்கு விட்டியர் என்ற ஒரு சிறிய நகரம் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒரே கட்டிடத்தில் வாழ்கின்றனர்.
14 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான அனைத்தும் இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ளது.
இந்த பகுதியில் துறைமுகம் உள்ளதால் மக்களின் வேலைவாய்ப்புக்கும் அது உதவுகிறது.
கடும் பனிப்பொழிவு
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கு பனிப்போர் நடந்த போது இந்த பகுதியில் ராணுவ துறைமுகம் கட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து, ராணுவ தளம் அமைக்கப்பட்டு ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் இங்கு நேரத்தை செலவிட தொடங்கினர்.
எவ்வாறாயினும், கடும் பனிப்பொழிவு நிலவும் பகுதி என்பதால் இந்த நகரம் அவ்வப்போது பனியில் மூழ்கிவிடும். இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க, 1954 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை இரும்பு மற்றும் கான்கிரீட்டால் இங்கு கட்டிடம் கட்டப்பட்டது.
வரலாற்று சான்று
சுமார் 700க்கும் அதிகமானோர் வசிக்கும் வகையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. 1956 ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்த போது அதற்கு ஹாட்ஜ் என பெயரிடப்பட்டது.
பிறகு அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து கட்டிடத்தை வாங்கிய பொதுமக்கள் 1972 ஆம் ஆண்டில் இதற்கு பெகிச் டவர் என பெயரிட்டனர்.
பல்பொருள் அங்காடிகள், காவல் நிலையம், கோயில், மருத்துவமனை, தபால் அலுவலகம் என அனைத்துமே இந்த கட்டிடத்தில் அமைந்துள்ளது.
கடும் குளிரை சமாளிக்க பள்ளி செல்லும் மாணவர்களுக்கு கட்டிடத்தின் கீழ் சிறப்பு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கடும் குளிரில் இருந்து தம்மை காப்பாறிக் கொள்ள அனைவரும் ஒரே இடத்தில் வசிக்கும் இந்த கட்டிடம் அலஸ்காவின் வரலாற்று சான்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |