இரு துருவங்களாகவுள்ள உலகின் பெரும் வல்லரசுகளுக்கிடையில் அதிகரித்துள்ள பதற்றத்தின் மத்தியில் இடம்பெறவுள்ள சந்திப்பு!
இரு பெரும் வல்லரசுகளின் தலைவர்களுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா-சீனா நாட்டுத் தலைவர்களே மெய் நிகர் ஊடாக சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உலகின் இரண்டு பெரிய கரியமில வாயுவை வெளியேற்றும் சீனாவும் அமெரிக்காவும் - கிளாஸ்கோவில் நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்க்பட்டுள்ளது.
அந்த வகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை திங்களன்று சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இரு தலைவர்களுக்கு இடையிலான மெய்நிகர் சந்திப்பு செப்டம்பர் மாதம் இடம்பெற்றிருந்தது. வர்த்தகம், இணைய அச்சுறுத்தல்கள், காலநிலை, தாய்வான் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையில் அதிகரித்த பதற்றங்களுக்கு மத்தியில் சில ஸ்திரத்தன்மையை இந்த சந்திப்பு உருவாக்கும் என்று வொஷிங்டன் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, திங்கள்கிழமை மாலை பைடனும், ஜி ஜின்பிங் வீடியோ அழைப்பில் சந்திப்பார் என்று உறுதிபடுத்தியுள்ளார்.