ட்ரம்ப் மீண்டும் அதிபராக வேண்டும்! பிரித்தானிய முன்னாள் அமைச்சரின் கோரிக்கை
Donald Trump
United States of America
United Kingdom
Liz Truss
World
By Eunice Ruth
எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என பிரித்தானிய முன்னாள் தலைமை அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் டிரம்ப் இருக்கிறார் என்பது உலகம் பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துவற்கான சான்று என அவர் கூறியுள்ளார்.
ஆபத்தான உலகம்
பிரித்தானியாவில் மிகக் குறுகிய காலம் தலைமை அமைச்சராக பதவி வகித்த லிஸ் ட்ரஸ், மோதல்களால் உலகம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், முன்னெப்போதும் இல்லாத வலுவான அமெரிக்கா தற்போது தேவைப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அதிக ஆதரவுடன் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி