மில்லியன் கணக்கான தோட்டாக்களை உக்ரைனுக்கு வழங்கிய அமெரிக்கா
Russo-Ukrainian War
United States of America
Ukraine
World
By Dilakshan
கடந்த ஆண்டு ஈரானிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான தோட்டாக்களை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் மாதம் ஈரானில் இருந்து ஏமன் நோக்கிச் சென்ற கப்பலில் இருந்து வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதாக மத்திய கிழக்கின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்தியக் கட்டளை கூறுகிறது.
இந்நிலையில், வெடிமருந்துகள் பயன்படுத்தப்படும் விகிதத்திற்கு ஏற்ப தங்கள் உற்பத்தி மிகவும் குறைவாக இருப்பதாக உக்ரைனின் வெஸ்ட் கூட்டாளிகள் சமீபத்தில் கூறியுள்ளனர்.
சிவில் பறிமுதல்
இந்த வெடிமருந்துகள் முதலில் மர்வான் 1 கப்பலில் இருந்து அமெரிக்க கடற்படையால் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அரசாங்கம் ஜூலை மாதம் சிவில் பறிமுதல் எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் அவற்றின் உரிமையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி