கொரிய தீபகற்பத்தில் அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்
United States of America
North Korea
South Korea
By Pakirathan
வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக, அமெரிக்காவின் சக்திவாய்ந்த அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் ஒன்று தென்கொரியா சென்றுள்ளது.
அண்மையில் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சியில் தோல்வியை தழுவிய வடகொரியா, நேற்று மீண்டும் 2 குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
இந்தநிலையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான எஸ்.எஸ்.ஜி.என் என அழைக்கப்படும், அணுசக்தி மூலம் இயங்கக்கூடிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று 6 ஆண்டுகளுக்கு பின் தென்கொரியாவின் புசான் துறைமுகத்திற்கு சென்றுள்ளது.
அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்
கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பை பலப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க - தென்கொரிய அதிபர்கள் ஒப்புக் கொண்டனர்.
அப்போது, வடகொரியாவின் தாக்குதலில் இருந்து தென்கொரியாவை பாதுகாக்கும் வண்ணம், அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் அனுப்பப்படும் என அமெரிக்கா உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
