ரஷ்யா மீது பொருளாதாரத்தடை! அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
காரணமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விவகாரத்தில் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.
‘‘அலெக்சி நவால்னி வழக்கில் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளின் மற்றொரு தொகுப்பை நாங்கள் தயார் செய்து வருகிறோம்.
நாங்கள் சரியான இலக்குகளை பெற தொகுப்புகளை உருவாக்கியுள்ளோம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பொருளாதார தடை அறிவிப்பு வெளியாகும்.
அதைசெய்யும்போது ரசாயன ஆயுதங்கள் தொடர்பாகவும் மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம்’’ என கூறினார்.
அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அமெரிக்கா கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா ரஷ்யா மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.