அமெரிக்க கிரீன் கார்ட் விதிமுறையில் மாற்றம் - குடியுரிமையை பெற அரியவாய்ப்பு!
United States of America
World
By Pakirathan
கிரீன் கார்ட் பெறுவதற்கான விதிகளில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்காக அந்நாட்டு அரசினால் ஆண்டுதோறும் 1 இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கிரீன் கார்ட் வழங்கப்படுகிறது.
இதில் அதிகபட்சமாக ஒரு நாட்டில் உள்ள 7 சதவீதம் பேருக்கு வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு கிரீன் கார்ட்
இந்தநிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வின்படி, கடும் உடல் நல பாதிப்புக்களை எதிர்கொள்பவர்கள், உடல் ஊனம், வேலை பார்க்கும் நிறுவனத்துடன் வழக்கு உள்ளிட்ட பிரச்சனைகளால் கடும் சவால்களை சந்திப்பவர்கள் உரிய ஆதாரங்களை முன்வைத்தால் அவர்களுக்கு கிரீன் கார்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு பெரும்பாலானவர்கள் தமது வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
