சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்: புதிய நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு
அமெரிக்க (US) ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்து ஆவிகளுடன் பேசும் ஒருவர் தனது கணிப்பை தெரிவித்துள்ளமை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்தவகையில், பிரித்தானியாவை சேர்ந்த புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் கிரேக் ஹாமில்டன் - பார்க்கர் (Craig Hamilton-Parker) என்பவரே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் அடுத்து அமெரிக்க ஜனாதிபதியாகக்கூடும் என ஊடகங்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.
கமலா ஹாரிஸ்
இந்தநிலையில், கமலா ஹாரிஸ் (Kamala Harris) எடுக்கும் முடிவுகள் அவரை பலவீனமானவராக காட்டும் எனவும் அதை பயன்படுத்திக்கொண்டு ட்ரம்ப் தன்னை வலிமையானவராக முன்னிறுத்தி ஜனாதிபதியாக வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.
அத்துடன், ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற, இந்திய அல்லது ஆபிரிக்க வம்சாவளியினரான ஒரு பெண் அவருக்கு உதவுவார் என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில், ”முதலில், அந்தப் பெண், வர்ணனையாளரான கேண்டஸ் ஓவன்ஸாக (Candace Owens) இருக்கலாம் என்று நான் நினைத்தேன்.
ஆனால், அது ட்ரம்ப்பின் ஆதரவாளரான ஜே.டி.வான்ஸின் (J. D. Vance) மனைவியான உஷாவாக இருக்கும் என்று இப்போது தோன்றுகிறது” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |