சாம்பல் மேடாக மாறிய லொஸ் ஏஞ்சல்ஸ் : ஆட்டம் காட்டும் காட்டுத்தீ
அமெரிக்காவின் (United States) லொஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles)பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பலக்கோடி செலவில் கட்டப்பட்ட ஹொலிவுட்(Hollywood) பிரபலங்களின் வீடுகள் சாம்பலாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரவித்துள்ளன.
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுத்தீயால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளிக்கும் நிலையில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹொலிவுட் பிரபலங்கங்
லொஸ் ஏஞ்சல்சின் முக்கிய பகுதியான ஹொலிவுட் ஹில்ஸில் பல ஹொலிவுட் படத்தயாரிப்பு நிறுவனங்களும், ஹொலிவுட் பிரபலங்களின் வீடுகளும் உள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயால் பல கோடி செலவில் கட்டிய வீடுகளை இழந்துள்ளனர் ஹொலிவுட் பிரபலங்கள் பலர்.
மேலும் பிரபல ஹொலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் மாலிபு பகுதியில் கட்டிய வீடு எரிந்து சேதமடைந்துள்ளதை தனது சமுக வளைதளத்தில் பகிர்ந்து வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
தீயணைப்பு வீரர்கள்
இதுபோல கேரி எல்விஸ், ஆடம் ப்ராடி, லெய்டன் மீஸ்டர், அண்டனி ஹாப்கின்ஸ் என பல ஹொலிவுட் நடிகர், நடிகையர் தங்களது ஆடம்பர வீடுகளை ஒரு நாளிலேயே இழந்துள்ளனர்.
பல இடங்களில் வீடுகள் எரிந்து சாலை வழிகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |