நிவாரணப் பொதிகளை ஏற்றிச் சென்ற அமெரிக்கர்களுக்கு நேர்ந்த விபரீதம்
கரீபியன் தீவு நாடான ஜமைக்காவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக விமானத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த தந்தை, மகள் இருவருமே இவ்வாறு சிறிய ரக விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளையில், விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து நேற்று(11.11.2025) சிறிய ரக விமானத்தில் இருவரும் பயணித்துள்ளனர்.
விமானத்தை செலுத்திய நிலை
53 வயதுடைய தந்தையான அலெக்சாண்டர் விமானத்தை செலுத்திய நிலையில், அவ்விமானம், புளோரிடாவின் கரோல் ஸ்பிரிங் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்துள்ளது.

இந்த விபத்தில் அலெக்சாண்டர் மற்றும் அவரது மகள் செரினா (22) இருவரும் உயிரிழந்துள்ளனர்.
ஜமைக்காவில் கடந்த 28ஆம் திகதி மெலிசா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பலரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான ரீதியாக உதவிகளை அமெரிக்கா வழங்கி வரும் நிலையில், அங்குள்ள தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த இந்த தந்தையும் மகளும் நிவாரணப் பொருட்களுடன் ஜமைக்காவை நோக்கி பயணித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |