வெனிசுலா மீதான சர்வதேச நோட்டமிடல் அரசியலில் அமெரிக்காவின் சதுரங்க தந்திரம்
உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் களஞ்சியங்களை கொண்டுள்ள வெனிசுலாவில், ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவின் பெட்ரோல் அரசியல் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
நாட்டின் அரசியல், பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு உறவுகள் அனைத்தும் எண்ணெய் வளத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருவதால், மதுரோவின் ஆட்சி காலத்தில் எண்ணெய் மேலாண்மை பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.
மதுரோ ஆட்சியில், தேசிய எண்ணெய் நிறுவனம் PDVSA அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது. எண்ணெய் வருவாயை சமூக நலத் திட்டங்களுக்கும் அரசியல் ஆதரவை நிலைநிறுத்தவும் பயன்படுத்தியதாக அரசு தரப்பு கூறுகிறது.
ஆனால் எதிர்க்கட்சிகளும் சர்வதேச அமைப்புகளும், நிர்வாகத் தலையீடு, ஊழல் மற்றும் தொழில்நுட்பத் தகுதி இழப்பு காரணமாக எண்ணெய் உற்பத்தி கடுமையாக வீழ்ச்சியடைந்ததாக குற்றம் சாட்டுகின்றன.
இதற்கிடையில், வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைச் சுற்றி அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட சக்திகளுக்கிடையே அரசியல் போட்டி தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்கா, மதுரோ ஆட்சியின் மீது அழுத்தம் செலுத்தும் நோக்கில் எண்ணெய் தடைகள் மற்றும் நிபந்தனை அடிப்படையிலான தளர்வுகளை பயன்படுத்தி வருகிறது. மறுபுறம், ரஷ்யா மற்றும் சீனா வெனிசுலாவின் எண்ணெய் துறையில் தங்களது நலன்களை பாதுகாக்க முயற்சிக்கின்ற பின்னணியில் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |