வடக்கில் வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கியுடன் இருவர்!
Arrest
Vavuniya
Northern Province
Police #
By Vasanth
குஞ்சுக்குளம் பொலிஸ் சோதனைச் சாவடியில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் மன்னாரில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த வாகனத்தை மறித்து சோதனை மேற்கொண்ட போது நாட்டு துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சியுடன் வாகனத்தில் பயணித்த 34 மற்றும் 52 வயதுடைய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி