இந்தியாவில் வேகமாக பரவும் மூளை செல்களை உண்ணும் கொடிய அமீபா தொற்று
Kerala
India
By Sumithiran
மூளை செல்களை உண்ணும் நைஜீரியா ஃபோலேரி எனப்படும் கொடிய அமீபா தொற்று, இந்திய மாநிலமான கேரளாவில் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மாநிலத்தில் சுமார் 70 பேர் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 19 பேர் இறந்துவிட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூக்கு வழியாக மனித உடலுக்குள் நுழைவது கண்டுபிடிப்பு
அவற்றில் பெரும்பாலானவை கடந்த சில மாதங்களில் பதிவாகியுள்ளன. நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகள் போன்ற வெதுவெதுப்பான நீரில் காணப்படும் இந்த அமீபாக்கள் மூக்கு வழியாக மனித உடலுக்குள் நுழைவது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உலகளவில் இதுவரை 500 க்கும் குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளன, ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் கேரளாவில் மட்டும் 120 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
