வரவு - செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை தொடர்பில் வெளிவந்த தகவல்!
Parliament
Budget
SriLanka
SR Atticala
By Chanakyan
நாட்டின் அபிவிருத்தியை வலுப்படுத்தவும், வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையை குறைக்கும் நோக்கிலும் இம்முறை வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் திறைசேரி நிதியத்தின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல (SR Atticala) தெரிவித்துள்ளார்.
அரச தலைவரின் ஊடக கேந்திரத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நீர், பெருந்தெருக்கள் மற்றும் நீர்ப்பாசனம் என்பன தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக இம்முறை அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.