அம்பாறையில் சைக்கிளில் பயணித்தவர் கால்வாயில் விழுந்து உயிரிழப்பு
Sri Lanka Police
Ampara
Death
By Sindu
அம்பாறை, ரஜகல்தென்ன – நுகேலந்த பகுதியில் நீர்ப்பாசனக் கால்வாய்ப் பாலத்திற்கு அருகில் சைக்கிளில் பயணித்த ஒருவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (26) காலை இடம்பெற்றுள்ளது.
நுகேலந்த நோக்கிச் சைக்கிளில் பயணித்தவர் கால்வாயில் விழுந்து படுகாயமடைந்த நிலையில், செனரத்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விசாரணை முன்னெடுப்பு
உயிரிழந்தவர் ரஜகல்தென்ன பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பக்கிஎல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |