கல்முனையில் திடீர் முற்றுகை- வீட்டின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள்!
arrest
police
kalmunai
amparai
mauthamunai
By Kalaimathy
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 5 கிராமசேவகர் பிரிவு அல்-ஹம்றா வீதியில் உள்ள வீடொன்றின் கூரையிலிருந்து தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்-16 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்ட வீட்டு உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இன்று மதியம் கல்முனை பொலிஸ் விசேட பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றதுடன் 54 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே கைதாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி