அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவ விவகாரம் இழுபறியில்...! விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

Sri Lankan Tamils Ampara ITAK General Election 2024
By Sathangani Oct 09, 2024 03:54 AM GMT
Report

நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை (Ampara) மாவட்ட ஆசன விடயத்தில் இழுபறியாக இருப்பதாக பொது கட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட குடிசார் அமைப்பு, தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவற்றின் இணைப்பாளருமான இராசலிங்கம் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நேற்றிரவு (08) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசத்தில் உள்ள தமிழ் மக்களை ஒன்று திரட்டுகின்ற பணியை சிறப்பாக ஒன்றிணைத்து முடித்திருக்கின்றேன்.

வி.மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி வேட்புமனு தாக்கல்

வி.மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி வேட்புமனு தாக்கல்

தமிழ் மக்களின் வாக்குகள்

அந்தவகையில் தமிழ் மக்களை தேசத்தில் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் 2 இலட்சத்து 26,342 வாக்குகளை பெற்று இலங்கை வரலாற்றில் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றோம். அதன் பிற்பாடு உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதன் அடிப்படையில் தமிழ் மக்கள் பொதுச்சபையாக இந்த விடயங்களை முன்னெடுத்திருந்தோம். இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபையாக செயற்படுவதில்லை என்ற தீர்மானத்தில் இருக்கின்றோம்.

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவ விவகாரம் இழுபறியில்...! விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Amparai Tamil Representation Issue In Dispute

அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இன்று ஒரு ஆசனத்தை இழக்கக்கூடிய சூழ்நிலை இருக்கின்ற படியினால் இந்த அமைப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை பிரதேசங்களின் நலன் கருதி செயற்பட வேண்டும் என்ற முடிவிற்கு வந்திருந்தோம்.

அந்த வகையில் இரு வாரங்களாக தமிழ் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள 7 கட்சிகளுடன் கலந்துரையாடி இருந்தோம்.

இதனடிப்படையில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த 7 கட்சிகளுடன் நாங்கள் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டிருந்தோம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன் டக்ளஸுடன் சந்திப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன் டக்ளஸுடன் சந்திப்பு

வீட்டுச்சின்னத்தில் போட்டி

இதில் ஆரம்பம் முதலே தமிழ் தேசிய மக்கள் முன்னணி தாங்கள் தனித்து போட்டியிடுவதாக எமக்கு அறிவித்து விட்டார்கள். அதனைத் தொடர்ந்து இலங்கை தமிழரசுக் கட்சி நாங்கள் ஒன்றாக இணைய வேண்டும் ஒன்றாக கேட்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ச்சியாக இருந்தனர்.

இந்நிலையில் நாங்கள் அம்பாறை மாவட்ட பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நாங்கள் ஒன்றிணைந்து கேட்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவ விவகாரம் இழுபறியில்...! விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Amparai Tamil Representation Issue In Dispute

இருந்த போதிலும் எமது தமிழரசுக் கட்சியின் வீட்டுச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் எனவும் ஏனைய கட்சிகள் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள் என கூறி இருந்தார்கள்.

எனினும் இதர கட்சிகளின் உயர்மட்டங்கள் எடுத்திருந்த முடிவின் படி அம்பாறை மாவட்டத்தில் சங்கு சின்னத்திலும் திருகோணமலை மாவட்டத்தில் வீட்டு சின்னத்திலும் போட்டியிடுவதாக கூறி இருந்தனர்.

இந்த நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் மாறமாட்டோம் என இதர கட்சிகள் கூறி தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன்பிரகாரம் சங்கு சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் நிலைப்பாட்டை மாற்ற முடியாது என கூறி 5 இதர கட்சிகளும் இருந்தார்கள். இந்த நிலைப்பாட்டிற்கு தமிழரசுக்கட்சியினர் வர தயாரில்லை என கூறினர்.

அதிக சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்திய மாவட்டங்கள்

அதிக சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்திய மாவட்டங்கள்

கல்முனை பிரதேச செயலக விவகாரம் 

அதுமாத்திரமன்றி அம்பாறையில் தனித்து போட்டியிடுவதாகவும் கூறி இருப்பதால் நாங்கள் மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையில் இருக்கின்றோம். குடிசார் அமைப்புகளாக நாங்கள் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை என்ற மனவருத்தமான செய்தியை மக்களாகிய உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

இரவுக்குள் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையும் எமக்கு இருக்கின்றது. இதற்கு காரணம் தற்போதும் பேச்சுவார்த்தை முற்றுப்பெறாது சூம் தொழிநுட்பம் வாயிலாகவும் நடைபெறுவதாக அறிகின்றோம்.

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவ விவகாரம் இழுபறியில்...! விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Amparai Tamil Representation Issue In Dispute

அம்பாறை மாவட்டத்தின் ஆசனத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் நன்றாக சிந்தித்து ஒரு குடையின் கீழ் எல்லோரும் ஒரு சின்னத்தில் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளையும் நாங்கள் அழைக்கின்றோம். இந்த செய்தியை தமிழ் மக்களுக்கு அறிவிக்கின்றோம்.

தமிழ் மக்கள் சிறந்த முடிவினை எடுப்பார்கள். அவ்வாறில்லை எனில் பொருத்தமானவர்களை தெரிவு செய்வதற்கு தமிழ் மக்களின் கைகளில் ஒப்படைக்கின்றோம்.

நேர்மையானவர்களாக, கறைபடியாதவர்களாக, தமிழ் மக்களில் அக்கறை கொண்டவர்களாக, தமிழ் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக, கல்முனை பிரதேச செயலக பிரச்சினையை தீர்ப்பதற்கு அக்கறை உள்ளவர்களாக, தமிழ் உணர்வாளர்கள் யார் என்பதை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்“ என தெரிவித்தார்.

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப் பணி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025