கடும் நிபந்தனைகளுடன் அம்பிட்டிய தேரருக்கு பிணை!
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கடந்த 31ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கடந்த 7ஆம் திகதி மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பிணை
இதனையடுத்து, அவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |