2012 கிரேக்க பிணைமுறி வழக்கு! அஜித் நிவாட் கப்ரால் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு
2012 ஆம் ஆண்டின் கிரேக்க பிணைமுறி தொடர்பான வழக்கில் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தனக்கெதிராகத் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார்.
இன்றைய தினம் (11) இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவு
அதன்போது, மேலதிக வாதங்களை முன்வைப்பதற்காக இந்த வழக்கை ஒக்டோபர் 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிரேக்கப் பொருளாதாரச் சரிவு பற்றித் தெரிந்திருந்தும் அரசு நிதியை கிரேக்க பிணைமுறிகளில் முதலீடு செய்து அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பல பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |