டொலரின் மதிப்பு அதிகரிப்பு: இன்று முக்கிய வங்கிகளால் மாற்றப்பட்ட சமீபத்திய வட்டி விகிதங்கள்
நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில், இன்று இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சிறிதளவு உயர்ந்துள்ளது.
எனினும், சில வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 332 ரூபாயை அண்மித்த மட்டத்தில் பெரிய மாற்றமின்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் 324.35 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 333.60 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.
டொலரின் மதிப்பு அதிகரிப்பு
NDB வங்கியில் டொலரின் கொள்வனவு விகிதம் 324.00 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 333.00 ரூபாயாகவும் உள்ளது.

மக்கள் வங்கியில் டொலரின் கொள்வனவு விகிதம் 324.55 ரூபாயிலிருந்து 324.45 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 332.60 ரூபாயிலிருந்து 332.50 ரூபாயாகவும் சிறிதளவு குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்வனவு விகிதம் 322.85 ரூபாயிலிருந்து 322.60 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 332.75 ரூபாயிலிருந்து 332.50 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
இதனிடையே, சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் 324.50 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 332.50 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |