இரத்தினபுரி நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சு : ஐவர் படுகாயம்
Sri Lanka Police
Ratnapura
Crime
By Shalini Balachandran
இரத்தினபுரி நீதிமன்ற வளாக வீதியில் பாதசாரி கடவைக்கு அருகில் இடம்பெற்ற அசிட் வீச்சில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று காலை(06) இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆசிட் வீச்சு
அதாவது கார் விபத்தில் சிக்கிய ஒருவரின் தந்தை, அந்த கார் விபத்துக்கு காரணமானவர் என்று நம்பப்படும் நபரைத் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆசிட் வீச்சுக்கு அருகில் இருந்த நான்கு பேர் துரதிர்ஷ்டவசமாக சிக்கி காயம் அடைந்ததுடன் ஐந்து பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆசிட் வீச்சுக்கு காரணமானவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 11 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்