உக்ரைன், ரஷ்ய பயணிகள் நாட்டை விட்டு வெளியேற காலக்கெடு : ரணில் பிறப்பித்த உத்தரவு
Ranil Wickremesinghe
Sri Lanka Tourism
Ukraine
Russia
By Sumithiran
நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் அமைச்சரவையின் அனுமதியின்றி 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இது தொடர்பாக தீர்மானிக்கவில்லை எனவும் அதிபர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை
இதேவேளை, நாட்டில் தங்கியுள்ள ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்