அமைச்சர் கெஹலியவின் வீட்டிற்கு முன் மலர் வளையம் வைக்க முயற்சி
தரமற்ற ஹியுமன் இமியூனோகுளோபியூலின் மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு உடந்தையாக இருந்தார் எனத் தெரிவித்து முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டிற்கு முன்பாக மலர் வளையம் வைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாகவே இந்த மலர் வளையத்தை வைப்பதற்கு எடுத்துச் சென்றுள்ள சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
தட்டப்பட்ட அமைச்சரின் வீட்டு படலை
மருத்துவர் சமல் சஞ்ஜீவ மற்றும் சமூக செயற்பாட்டாளர் சஞ்ஜய மாவத்த உள்ளிட்ட சிலர், மலர் வளையத்தை கொண்டு சென்று, அமைச்சரின் வீட்டின் படலையை தட்டியுள்ளனர். எனினும், அங்கு கடமையில் இருந்தவர்கள், படலையை திறக்கவில்லை.மலர் வளையத்தை வைப்பதற்கும் இடமளிக்கவில்லை.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை
எனினும், அந்த சந்தர்ப்பத்தில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குறித்த மலர் வளையத்தை வைக்கவிடாது தடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |