இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை கைது!
விசா இன்றி தங்கியிருந்த எகிப்திய பிரஜை ஒருவர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்று கண்டி பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பதுங்கியிருந்த போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த எகிப்தியர், கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி கொழும்பில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
நாடு கடத்தப்படும் வரையில்
இவர் குடிவரவு அதிகாரிகளால் நாடு கடத்தப்படும் வரையில் தடுப்பு முகாமில் இருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு தப்பிச் சென்ற எகிப்தியர் கண்டி பிரதேசத்தில் தர்மசேன மாவத்தையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |