சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு விபத்து - 11 பேர் உயிரிழப்பு
                                    
                    Accident
                
                        
        
            
                
                By pavan
            
            
                
                
            
        
    வடக்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 8.26 மணிக்கு சீனாவின் யான் நகருக்கு அருகே உள்ள Xintai நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு சீனாவின் சாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என செவ்வாய்க்கிழமை வெளியான ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம்

அத்துடன் விபத்து ஏற்பட்ட போது 90 பேர் வரை நிலக்கரி சுரங்கத்தில் இருந்ததாகவும், உயிரிழந்தவர்கள் தவிர மேலும் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரிய வராத நிலையில் அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        